/tamil-ie/media/media_files/uploads/2023/06/thol-thiru-1.jpg)
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு போராட்டம் நடைபெற்றதால் நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த பிரச்னைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றதில் திருமாவளவன் பாமகவை விமர்சித்து பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பாமக மூத்த வழக்கறிஞர் பாலு கூறியதாவது: "
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் தங்களது சமுதாயத்தை மிகவும் கேவலமாக இழிவுபடுத்தும் வகையில் ஒருமையில் பேசியுள்ளார்.
பொது அரசியல் தளத்தில் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக திருமாவளவன் பேச்சு இருந்தது, இந்த அரசியல் போக்குக்கு சரியானது அல்ல.
மேலும் நிகழ்ச்சியில் கீ.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டும் திருமாவளவன் பேச்சுக்கு யாரும் எதிர் கருத்து தெரிவிக்கவில்லை. திருமாவளன் பேச்சுக்கு எதிராக தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை மனதில் வைத்தே மேல்பாதி விவகாரத்தை திருமாவளவன் பேசி வருகிறார்.
ஒரு தனி நபர் கருத்தை ஒரு சமுதாயதோடு இணைத்து பேசியது மிகவும் தவறு. திருமாவளவன் உண்மைக்கு புறம்பான அரசியல் நாகரிகம் சீர்குலைக்கும் கருத்தை செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் இழந்திருக்கிறார். எனவே திருமாவளவன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும்", என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.