பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் மாநாட்டில், “வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கிட்டை உடடினயாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இடஒதுக்கீட்டை வழங்க வண்டும்” என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் அதில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மகளிர் பெருவிழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) பூம்புகாரில் நடைபெற்றது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில், “பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கிட்டை உடடினயாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இடஒதுக்கீட்டை வழங்க வண்டும்” என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பா.ம.க வன்னியர் சங்க இணைந்து நடத்திய மகளிர் மாநாட்டில் ராமதாஸ் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.
பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் முழ்வு விவரம்:
1.பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.
2.பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும்.
3.பாலியல் வன்கொடுமை செய்பவரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமையே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
4.தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
5.தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரால் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
7.பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் நிலையில், அதை தடுத்திட பெண் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும்.
8.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோரின் ஊதியத்தையும், பணி நாட்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.
9.மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பெற கூடுதலாக மகளிர் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும்.
10.புற்றுநோயால் பாதிக்கப்படும் அணைத்து பெண்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
11.வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கிட்டை உடடினயாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இடஒதுக்கீட்டை வழங்க வண்டும்.
12.சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
13.நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதேபோல் கூடுதல் நெல் கொள்முதல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.
14.பூம்புகார் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சரஸ்வதி ராமதாஸ், ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.