21 வருடங்கள் கழித்து பாமகவில் இணைந்த பேராசிரியர் தீரன்…

எந்த சூழலில் இக்கட்சி வேண்டாம் என்று வெளியேறினாரோ அதே சூழலில் மீண்டும் வந்து இணைந்துள்ளார் பேராசிரியர்

PMK's former president Dheeran rejoins PMK
PMK's former president Dheeran rejoins PMK

PMK’s former president Dheeran rejoins PMK : பாமகவின் முன்னாள் தலைவர் தீரன் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பமகவில் இணைந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.  வன்னியர் சங்கம் ஆரம்பித்த காலம் முதல் கட்சிக்காகவும், வன்னியர் சங்கத்திற்காகவும் நிறுவனர் ராமதாஸூடன் இணைந்து ஒன்றாக உழைத்தவர்.

PMK’s former president Dheeran rejoins PMK

1998ம் ஆண்டு அதிமுக – பாஜக – கூட்டணியில் பாமக இணைந்தது. அப்போது நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக அந்த கூட்டணி அமைக்கப்பட்டது. அதற்க்கு அதிருப்தி தெரிவித்து வெளியேறிய அவர் மீண்டும் அதே மாதிரியான அரசியல் சூழல் நிலவுகின்ற நேரத்தில் கட்சியில் இணைந்திருக்கிறார்.

1989ம் ஆண்டு பாமக சார்பில் அரியலூரின் ஆண்டிமடம் என்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியாற்றினார். 1998ம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேறிய அவர் தமிழ் பாட்டாளி மக்கள் கழகம் என்ற ஒன்றை துவங்கினார். பின்பு வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார் தீரன். அந்த கட்சியிலும் அவர் நீடித்து நிற்கவில்லை. பிறகு அதிமுகவில் இணைணந்தார். அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த அவர் 2018ம் ஆண்டு அக்கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

பிறகு மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். 21 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை பிரித்த காலம் தற்போது எங்களை மீண்டும் இணைத்துள்ளது என்று ராம்தாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது என்ன?

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pmks former president dheeran rejoins pmk after 21 years

Next Story
Vellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவுVellore Lok sabha election results 2019, AC Shanmugam, Kathir Anand
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com