கடலூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை: புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல், இருவர் கைது!

புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் பிளாஸ்டிக் கவரில் கடத்தி வரப்பட்ட 86 மது பாட்டில்களை கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் பிளாஸ்டிக் கவரில் கடத்தி வரப்பட்ட 86 மது பாட்டில்களை கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Puducherry liquor seized

புதுவையில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் மொத்தம் 52 பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடலூர்  மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் , கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் தலைமை காவலர்   வெற்றிவேல், தலைமை காவலர் கிருஷ்ணராஜ்  ஆகியோர்கள் கடலூர் கே.என். பேட்டை பைபாஸ் ஜங்ஷன் அருகே  போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்தனர் 

Advertisment

அந்த வழியாக  டி.என் 31, சிஎஃப் 2298 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த காரைக்காடு  பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (29) என்பவரை நிறுத்தி இருசக்கர வாகனத்தை சோதனை   செய்தனர்

புதுவை மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள்  மொத்தம் 52 பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கையில் கருப்பு நிற பிளாஸ்டிக் கவருடன் நடந்து வந்த மேல் புவனகிரியைச் சேர்ந்த இறையன்பு வயது (24), கீழ் புவனகிரியைச் சேர்ந்த நேதாஜி  இருவரையும் நிறுத்தி சோதனை செய்ததில் புதுச்சேரியில் இருந்து மறைத்து எடுத்து வரப்பட்ட 34 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு கடலூர் மதுவிலக்கு  பிரிவ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செய்தி: பாபு ராஜந்திரன் - புதுச்சேரி

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: