மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து கள்ளுக் கடை சாராயக்கடை மதுக்கடைகள் விடுமுறை அளித்துள்ள நிலையில், இன்று (10.04.2025) பிளாக் மார்க்கெட்டில் மது விற்பனை செய்யப்படுவத் தடுக்க கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தும்படி கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் கடலூர் புதுச்சேரி எல்லை சோதனை சாவடிகளான ஆல்பேட்டை, குமந்தன்மேடு, சாவடி, மருதாடு, அழகியநத்தம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் கண்டரக்கோட்டை சோதனை சாவடிகள் மற்றும் காவல் நிலைய சரகங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் இராஜா மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் இராஜா, கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, சேகர் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் முத்தாண்டிகுப்பம்
காவல் சரகம் முடப்பள்ளி முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சிய
முடப்பள்ளியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 70), காட்டுகூடலூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு (வயது 55) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயம், பாண்டி மதுபாட்டில் 8, பிளாஸ்டிக் பேரல்கள் 5, அன்னக்கூடை 3, மண்பானை மற்றும் டி.வி.எஸ் 50 வாகனம் பறிமுதல் முதல் செய்யப்பட்டது.
அதே போன்று, அனுமதியின்றி 437 டாஸ்மார்க் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சொரத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் 18 பேர் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து 78 புதுவை மாநில மதுபான பாட்டில்கள், 453 டாஸ்மார்க் மதுபான பாட்டில்கள், மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் 2 புதுவை மாநில சாராயம் 442 லிட்டர் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.