/tamil-ie/media/media_files/uploads/2022/08/MARINA-BEACH.jpg)
சென்னை கடற்கரை
மெரினா கடற்கரையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த பெண்ணை புகைப்படம் எடுத்து மிரட்டிய போலி காவலரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
பொது மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் நடந்த இந்தப் பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, “கடந்த 2019ஆம் ஆண்டு காதல் ஜோடி ஒன்று மெரினா கடற்கரை வந்துள்ளது.
அந்த காதல் ஜோடி அத்துமீறிய நிலையில், அதைப் புகைப்படமாக எடுத்த சதீஷ் தான் காவல் ஆணையர் எனக் கூறி அந்தப் பெண்ணை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்ந்து நடந்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட சிறுக சிறுக ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் பயந்துபோய் சதீஷ் கேட்கும் நேரமெல்லாம் பணம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவரிடம் பெரிய தொகை மிரட்ட அவர் வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். தொடர்ந்து சதீஷை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.
இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொது இடங்களில் ஜோடியாக வருவோர் அத்துமீறி அநாகரீகமாக நடக்க வேண்டாம்.
மேலும் யாரும் உங்களை மிரட்டுவது போல் தெரிந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மோசடி நபர்கள் விரைந்து கைதாவார்கள்” என்றார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் பெண்ணை மிரட்டி தொடர்ச்சியாக பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.