புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக மதுபானம் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு எல்லைக்குட்பட்ட கிளியனூர் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் முதல் நிலைக் காவலர்கள் சிவக்கொழுந்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், அந்த வாகனத்தில் இருந்த இருவர் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது. உடனடியாக அந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் கருங்காகுப்பம் நுறுக்குபாறை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்துருவின் மகன் அசோக் குமார் மற்றும் முருகன் என்பவரின் மகன் சிகாமணி என்பது தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து 147 மது பாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.