சென்னையில் மனைவி உதவியுடன் கோவிலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி ஆசாமி கைது!

சென்னையில் மனைவி உதவியுடன் கோவிலில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த தம்பதியினர், நகரில் ‘ஷிர்டிபுரம் சர்வ சக்தி பீடம் சாய்பாபா கோயில்’ என்ற வழிபாட்டுத் தலம் வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Chennai Godman arrested
Police arrests fake godman for sexually abusing a girl at a temple in Chennai

சென்னையில் தன்னைத் தானே கடவுளாகக் கூறிக்கொண்டு, சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி ஆசாமியை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சத்தியநாராயணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அவரது மனைவி புஷ்பலதா ஆகியோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதியினர், நகரில் ‘ஷிர்டிபுரம் சர்வ சக்தி பீடம் சாய்பாபா கோயில்’ என்ற வழிபாட்டுத் தலம் வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ஏப்ரல் 12, 2016 அன்று, சிறுமியின் பாட்டி அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவளுக்கு 16 வயது. வழிபாடு முடிந்த பின், திருநீரு கொடுப்பதற்காக சிறுமி அறைக்குள் அழைக்கப்பட்டாள், ஆனால் புஷ்பலதா அவளுக்கு ஒரு கிளாஸ் சாறு கொடுத்தாள்.

இரண்டு மணி நேரம் கழித்து, சிறுமிக்கு சுயநினைவுக்கு வந்தபோது, ​​அவள் நிர்வாணமாக இருப்பதையும், சத்திய நாராயணன் உட்பட இரண்டு ஆண்களும் அதே மாதிரியான ஆடைகளை களைந்த நிலையில் இருப்பதையும் கண்டாள்.

அப்போது, சத்ய நாராயணன் சிறுமியிடன், பாலினச் செயல்’ பல பாவங்களை நீக்கும் பூஜை என்று கூறினார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி, யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று மிரட்டினார்.

தொடர்ந்து அவளது பாட்டியும், சிறுமியும் சென்னையிலிருந்து காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். 2018இல் சிறுமிக்கு 18 வயதாகும் போது வேறொரு ஆணுடன் திருமணம் நடந்தது. அவளது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மார்ச் 2020 இல், சத்திய நாராயணன் சிறுமியை தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் வருமாறு அவளை அழைத்தார், இல்லையென்றால் நிர்வாண படங்களை கணவரிடம் காண்பிப்பதாக மிரட்டினார். கோவிலுக்கு வருமாறு கட்டாயப்படுத்தி, அங்கு அவர் அவளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று அதிகாரி கூறினார்.

ஜூலை 2020 இல், பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்ததும், சத்ய நாராயணனும் அவரது மனைவியும் குழந்தையை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டினர். இதனால் பெண் தற்கொலை செய்து கொள்ள முயன்றார், ஆனால் அவர் தனது பாட்டியால் காப்பாற்றப்பட்டார், மேலும் அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்த சூழலில், இந்த ஆண்டு நவம்பரில், பெண்ணின் கணவர் அவரைச் சந்தித்தார், அப்போது நடந்த விஷயங்களை எல்லாம் பெண், கணவரிடம் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் வீட்டார், நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பிறகு, சத்தியநாராயணன் மற்றும் அவரது மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 328 (மயக்கத்தால் காயப்படுத்துதல்), 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (ii) (குற்ற மிரட்டல்) மற்றும் பிரிவு 5(f) (மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை), பிரிவு 11 (மின்னணுப் படங்களைக் கொண்டு அச்சுறுத்தல்) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 17 (துணை) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சத்திய நாராயணன் ‘ஷிர்டிபுரம் நானா பாபா’ என்ற யூடியூப் சேனலையும் வைத்துள்ளார். அதில்’ 300க்கும் மேற்பட்ட வீடியோக்களை, ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர் என போலீஸ் அதிகாரி கூறினார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Police arrests fake godman for sexually abusing a girl at a temple in chennai with the help of his wife

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com