New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/01/attack-video-2025-07-01-15-05-13.jpg)
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழக காவல்துறையின் செயல்பாடு "கொடூரமான மிருகத்தனம்" என்று அவர் சாடியுள்ளார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழக காவல்துறையின் செயல்பாடு "கொடூரமான மிருகத்தனம்" என்று அவர் சாடியுள்ளார். தனது ட்வீட்டில், "இது தொழில்முறை காவல்துறை கிடையாது, இது பச்சையான மிருகத்தனம். தமிழக காவல்துறை முழுவதுமே மறுபயிற்சி பெற வேண்டும். அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமாரின் மிருகத்தனமான கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்" என்று தமிழக முதலமைச்சர் அலுவலகத்தையும் (@CMOTamilnadu) டேக் செய்துள்ளார்.
This is not professional policing, this is crude brutality. The entire @tnpoliceoffl force must undergo retraining. Officers must be held responsible. @CMOTamilnadu #AjitKumar, all those involved in his brutal murder must be booked & prosecuted. https://t.co/8VxPrHF3pW
— Karti P Chidambaram (@KartiPC) July 1, 2025
அஜித்குமார் மரணம் தொடர்பாக ஏற்கனவே பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் இந்த விவகாரம் குறித்துக் குரல் எழுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது, தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுவதை எடுத்துக்காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.