கடலூர் வந்த டி.டி.எஃப் வாசன்; திரண்ட ரசிகர்கள் கூட்டம்… விரட்டி அடித்த போலீஸ்… 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடலூர் வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசனைப் பார்க்க கூட்டம் கூடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அவருடைய ஆதரவாளர்களை விரட்டி அடித்த போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

ttf vasan, police booked case against ttf vasan, cuddalore, youtuber ttf vasan

கடலூர் வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசனைப் பார்க்க கூட்டம் கூடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அவருடைய ஆதரவாளர்களை விரட்டி அடித்த போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

கடலூர் மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன்
புதன்கிழமை கடலூர் புதுப்பாளையத்திற்கு வந்தார். அப்பொழுது அவரைக் காண ஏராளமான பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டி.டி.எஃப். வாசனுடன் வந்தவர்கள் தாறுமாறாக இரண்டு சக்கர வாகனங்களில் வந்து சாலைகளில் நிறுத்தினர். இதனால், போலீசார், டி.டி.எஃப் வாசன் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

டி.டி.எஃப் வாசனைப் பார்க்க 200க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

இதைத்தொடர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான இயக்குனர் செந்தில் செல்லம் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Police case filed against youtuber ttf vasan in cuddalore for crowd forms

Exit mobile version