தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு; மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மறியல்

வாலாஜ சாலையில் மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 63 எம்.எல்.ஏ.க்கள் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

police case registers against ops and 63 aiadmk mlas, aiadmk mlas tharna, aiadmk mlas opposing to join jayalalitha university with annamalai university, தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பி.எஸ், 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மறியல், அதிமுக, ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், விழுப்புரம், villupuram, annamalai university, jayalalitha university, aiadmk, ops, dmk, tamil nadu assembly

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பலகலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உட்பட 63 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக எஸ்.அன்பழகன் கடந்த மார்ச் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு, நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.முதலமைச்சரானதைத் தொடர்ந்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படும் அல்லது வேறு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று பேசப்பட்டது. உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போதே அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா கொண்டுவரப்பட்டது.

2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். அதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதன்மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த வகையிலிருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு சட்ட முன்வடிவில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என கூறினார். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர் . பின்னர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பாமக எதிர்ப்போ ஆதரவோ தெரிவிக்காத நிலையில், பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் 63 எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலாஜா சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏ.க்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும், வாலாஜ சாலையில் மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 63 எம்.எல்.ஏ.க்கள் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மறியலில் ஈடுபட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் விழுப்புரம், திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Police case registered against ops and 63 aiadmk mlas

Next Story
ஜெயலலிதா பல்கலை. இணைப்பு மசோதா நிறைவேற்றம், கோவில்களில் திருக்குறள் வகுப்புகள்; சட்டமன்ற ஹைலைட்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com