திருச்சி மாநகர காவல்துறையில் 4 ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கோட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றிய வந்த சிவராமன் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், அங்கிருந்த ஆய்வாளர் விஜயலட்சுமி அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலிருந்த ஆய்வாளர் வினோதினி திருச்சி மாநகர குற்றப்பிரிவுக்கு எண் 1 க்கும், திருச்சி மாநகர குற்றப்பிரிவு எண் 1 ஆய்வாளர் பெரியசாமி கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் மற்றவர்களைக்காட்டிலும், கோட்டை காவல் ஆய்வாளர் சிவராமன் அண்மைக்காலத்தில்தான் பணி அமர்த்தப்பட்டார். அவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு காரணம், அண்மையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“