கோவை கலெக்டர் அலுவலகம் எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் சிறுமி சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தினர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பழைய நுழைவு வாயில் எதிரில் சிறிய ரவுண்டானா உள்ளது. இதில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் சிறிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரவுண்டானாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நினைவுச் சன்னம் அமைக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/02/27/statue-vandalise-v-540796.jpeg)
உலக உருண்டை, அதன் அருகில் புத்தகங்கள் இருப்பது போன்றும் அதில் சிறுமி ஏறி செல்வது போன்றும் அந்த நினைவுச் சின்னம் அமைக்கப் பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு நினைவுச் சின்னத்தில் இருந்த சிறுமியின் சிலையை அந்தப் பகுதியில் சுத்திய மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் உடைத்து வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் உடனடியாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/02/27/statue-vandalise-vii-123606.jpeg)
ரோந்து சென்ற போலீசார் உடனடியாக மனநிலை பாதிக்கப்பட்ட அந்த வாலிபரை பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதியில் சுற்றி திரியும் 40 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் இரவு நேரங்களில் அங்கேயே படுத்து தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் சிறுமியின் சிலையை உடைத்து வீசியதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரை மனநல காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். சிலை உடைப்பு சம்பவம் மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வேறு சிலையை செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.