/indian-express-tamil/media/media_files/2025/09/29/tvkv-2025-09-29-14-08-26.jpg)
கரூரில் அரசியல் பலத்தை காட்ட, கூட்டத்தை அதிகரிக்க தாமதமாக வந்த விஜய்: எஃப்.ஐ.ஆரில் வெளியான தகவல்
த.வெ.க தலைவர் விஜய் கடந்த 27-ஆம் தேதி கரூர் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். விஜய்யின் வருகையை அறிந்த மக்கள் பரப்புரை நடைபெறும் இடத்தில் திரண்டனர்.
காலை 12 மணிக்கு கரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அவர் மாலையில் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது தெண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகப்படியாக திரண்டதால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி மயங்கி விழுந்தனர்.
கூட்ட நெரிசலின் காரணமாக பெண்கள், குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் மற்றும் த.வெ.க சார்பில் நிவாரணம் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் உயிரிழப்பு தொடர்பாக த.வெ.க மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், கரூரில் கூட்டத்தை அதிகரிக்கவே த.வெ.க தலைவர் விஜய் தாமதமாக வந்ததாக போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
மேலும், தனது அரசியல் பலத்தை பறைசாற்ற, கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் வேண்டுமென்றே காலதாமதமாக வந்தார். அசாதாரண சூழலை எச்சரித்தும் த.வெ.க பொதுச்செயலாளர் என். ஆனந்த் அதனை காதில் வாங்கவில்லை.
நெரிசல் அதிகரித்தால் உயிர் சேதம் ஏற்படுமென எச்சரித்தும் நிர்வாகிகள் கேட்கவில்லை. கரூரில் விஜய் அனுமதியின்றி சாலைவலம் சென்றார். நிபந்தனைகளை மீறியும் கால தாமதம் செய்தும் இடையூறு ஏற்படுத்தினார்.
முனியப்பன் கோயில் ஜங்ஷனில் ராங்ரூட்டில் வாகனங்களை ஓட்டி நெருக்கடி ஏற்படுத்தினார். கரூர் வர விஜய் 4 மணிநேரம் தாமதப்படுத்தினார் என்று கரூர் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.