Advertisment

MLA Karunas: கருணாஸூக்கு அடுத்தடுத்து செக்... 7 நாள் கஸ்டடியில் எடுக்க போலீசார் மனு தாக்கல்!

TN Police Seeks 7 Days Custody of MLA Karunas : இதனைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Police Seeks 7 Days Custody of MLA Karunas

Tamil Nadu Police Seeks 7 Days Custody of MLA Karunas

நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்.எல்.ஏ கருணாஸை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்க கோரி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

Tamil Nadu Police Files Petition in Court to Have 7 Days Custody of MLA Karunas for Investigation: கருணாஸை கைது செய்த போலீசார்:

கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசார் மற்றும் சில குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து கருணாஸ் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதனௌயடுத்து கருணாஸை வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட கருணாஸ் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், கருணாஸ் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருணாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நுங்கம்பாக்கம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். போலீசாரின் இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

மேலும், கருணாஸ் கைதினை கண்டித்து சென்னை நந்தனம் தேவர் சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கருணாஸ் ஆதரவாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தங்களை உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லமாமல் அங்கும் இங்கும் அலைக்கழித்தாக கைது செய்யப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். கைதான 58 பேரும் இதனைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Mla Karunas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment