சென்னை ராயப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி ரோகித் ராஜ் என்பவர் தப்ப முயன்றபோது போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி ரோகித் ராஜ் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரோகித் ராஜ் சென்னை டி.பி.சத்திரத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த இடத்தை போலீசார் இன்று சுற்றி வளைத்தனர்.
இதனை சுதாரித்த ரோகித் ராஜ் தப்ப முயன்று போலீசாரை தாக்கியதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“