Vijay Antonys daughters suicide Note : நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று அதிகாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பு படித்த அவர் கடந்த சில நாள்களுக்கு கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நான் இல்லாமல் என் குடும்பமும், குடும்பம் இல்லாமல் நானும் தவித்துப் போவேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம், “'Love you all… Miss you all” எனத் தொடங்கப்பட்டுள்ளது. கடிதத்தில் மொத்தம் 10 வரிகள் உள்ளது.
மீரா தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில், மீராவின் தற்கொலை செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதள பக்கங்களிலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தகவல் அறிந்ததும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா அவரது வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“