குடியரசு தினம் நாளை (ஜன 26) கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, திருச்சி மாவட்ட ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜி.எம். ஈஸ்வர ராவ் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, திருச்சி ரயில் நிலைய வளாகம், பார்சல் அலுவலகம், காத்திருப்பு கூடம், வி.ஐ.பி நுழைவுவாயில் மற்றும் பயணிகள் உடைமைகள் பாதுகாக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் செபாஸ்டியன், ரவிச்சந்திரன் மற்றும் மாசிலாமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும், வெடி குண்டு கண்டறியும் குழுவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்த பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
செய்தி - க. சண்முகவடிவேல்