Advertisment

தாம்பரத்தில் சிக்கிய ரூ.4 கோடி; யார் இந்த சவுக்கார்பேட்டை பிரமுகர்?

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சவுக்கார்பேட்டை ஜூவல்லரி உரிமையாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Police interrogated a Chaukarpet businessman in the case of Rs 4 crore in Tambaram

2024 ஏப்ரலில் தாம்பரத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில் சவுக்கார்பேட்டை தொழிலதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கியது. இந்த விவகாரத்தில் திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெயரும் அடிபட்டது.
மேலும், அவரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலர் கைதானார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நவீன், சதீஸ், ஸ்ரீவைகுண்டம், பெருமாள் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்த நிலையில், இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில் இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், அவரின் உதவியாளர் மணிகண்டன், பா.ஜ.க. அமைப்பு செயலாளர் சேகவ விநாயகம், கோவர்த்தன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
மேலும், நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அவரது மகன், பாலாஜியும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜரானார். இதற்கிடையில், “ரூ.4 கோடி  கைமாறிய விவகாரத்தில் சவுக்கார்ப்பேட்டையில் உள்ள ஜூவல்லரி கடை உரிமையாளர் ஒருவர் போலீசார் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment