Advertisment

பொதிகை எக்ஸ்பிரஸில் பயணித்த ரூ 180 கோடி போதைப் பொருள்: மதுரையில் மடக்கிய மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்

இரசாயனப் பகுப்பாய்வில் அது மெத்தாம்பேட்டமைன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் மேலும் சில மெத்தாம்பெட்டமைன் பாக்கெட்டுகள்..

author-image
WebDesk
New Update
Rs 180 crore worth of narcotics seized in Madurai

பொதிகை எக்ஸ்பிரஸில் பயணித்த ரூ 180 கோடி போதைப் பொருளை மதுரையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மடக்கினர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Train | Madurai | சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள், சென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) சுமார் ₹180 கோடி மதிப்பிலான 36 கிலோ மெத்தாம்பேட்டமைனைக் கைப்பற்றினர்.

Advertisment

முன்னதாக, வியாழக்கிழமை (பிப்.29) சென்னையில் இருந்து மதுரைக்கு பொதிகை விரைவு வண்டியில் பயணித்த பயணி ஒருவர் போதைப் பொருள்களை எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில், ரயில் மதுரை ஜங்ஷனை ரயில் வந்தடைந்தபோது ரயில்வே பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் போலீசார் சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து, அவரது உடமைகளை ஆய்வு செய்ததில், 30 கிலோ எடையுள்ள 15 பாக்கெட்டுகளில், வண்ண படிக பொருள் இருந்தது.

இரசாயனப் பகுப்பாய்வில் அது மெத்தாம்பேட்டமைன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் மேலும் சில மெத்தாம்பெட்டமைன் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விரைந்து வந்த அதிகாரிகள், அவரது வீட்டை சோதனையிட்டதில், அவரது மனைவி பாக்கெட்டுகளை குப்பைத் தொட்டியில் வீசியதும், குப்பைகள் ஏற்கனவே கொண்டுங்கையூர் கிணற்றில் கொண்டு செல்லப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட குப்பை கிடங்கிற்கு சென்று, தீவிர சோதனைக்கு பிறகு, 6 கிலோ எடையுள்ள 3 போதை பாக்கெட்டுகளை மீட்டனர்.

அதில் வெள்ளை நிற படிக பொருள் இருந்தது, அதில் மெத்தாம்பெட்டமைன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹180 கோடி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அவர் கடலோரப் பாதை வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கடத்தல் பொருட்களை எடுத்துச் சென்றதாக தெரியவந்தள்ளது.

மதுரை மாநகர காவல் துறையினர் கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் 800 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்ததை அடுத்து, இந்த மாதத்தில் மாநகரில் 2-வது முறையாக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madurai Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment