Advertisment

தலித் இளைஞரை திருமணம் செய்த பெண்... மத்தியஸ்தம் செய்து அனுப்பிய போலீஸ்; குடும்பத்தினரால் கொலை!

தஞ்சாவூரில் தலித் இளைஞரைத் திருமணம் செய்த பெண்ணை அவரது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
body

தலித் இளைஞரைத் திருமணம் செய்த பெண்ணை குடும்பத்தினரால் கொலை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தஞ்சாவூரில் தலித் இளைஞரைத் திருமணம் செய்த பெண்ணை அவரது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Hours after police mediated her return home, young woman from Tamil Nadu ‘killed by family for marrying Dalit man’

தலித் இளைஞரை திருமணம் செய்த பெண்ணை போலீஸ் மத்தியஸ்தம் செய்து அவருடைய வீட்டுக்கு அனுப்பிவைத்த நிலையில், அந்த பெண் ஜனவரி 3-ம் தேதி அவரது அறையில் இறந்து கிடந்தார். தலித் இளைஞர் நவீன் ஜனவரி 7-ம் தேதி தனது மனைவி ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒரு தலித் இளைஞரை திருமணம் செய்ததற்காக அவரது குடும்பத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் ஜனவரி 3-ம் தேதி நடந்துள்ளது.

பட்டுக்கோட்டை நெய்வவிடுதியைச் சேர்ந்த 19 வயது ஐஸ்வர்யா என்ற பெண், தஞ்சாவூர் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தலித் இளைஞரை காதலித்து வந்துள்ளார். நவீன் பட்டியல் சாதியான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஐஸ்வர்யா பிற்படுத்தப்பட்ட கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அரசியல் செல்வாக்கு பெற்ற தேவர் சமூகத்தில் மூன்று பிரிவுகளில் கள்ளர் சமூகமும் ஒன்று.

இந்த வழக்கை நன்கு அறிந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர்களது காதல் கதை அவர்களின் பள்ளி நாட்களில் தொடங்கி இருக்கிரது. நவீன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துவிட்டு, திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். ஐஸ்வர்யா உயர்நிலைக் கல்விக்குப் பிறகு அதே ஊரில் உள்ள விசைத்தறியில் வேலை பார்த்தார்.

“அவர்களது உறவு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்துள்ளது. அவர்கள் டிசம்பர் 31, 2023 அன்று கோயம்புத்தூர் அருகே ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நவீனுக்கு 19 வயது என்பதால் திருமணம் சட்டப்பூர்வமாக செல்லாது” என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்தச் சட்டச் சிக்கலை அறியாத தம்பதியினர், புதிய வாழ்க்கையைத் தொடங்க திருப்பூர் வீரபாண்டி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தனர். அது குறுகிய காலமே நீடித்தது.

கடந்த ஜனவரி 2-ம் தேதி, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் தனது மகள் காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார், இந்த காதல் ஜோடியின் வீட்டில் இருந்து அவரை அழைத்துச் சென்றனர். நவீன் போலீஸ் குழுவைப் பின்தொடர்ந்து சென்று காவல் நிலையத்துக்கு வெளியே காத்திருந்தார். பின்னர், அவர் அளித்த புகாரின்படி, அன்று மதியம் 2 மணியளவில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் அவரது  உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்து 30 நிமிடங்களில் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

நவீன் தனது பெற்றோருடன் செல்ல சம்மதித்ததாகவும், மீண்டும் அவளை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. அன்று இரவு தனது சொந்த ஊருக்குச் சென்ற நவீனுக்கு மறுநாள் காலையில் ஐஸ்வர்யா இறந்த செய்திதான் கிடைத்தது. ஐஸ்வர்யாவின் உடலை உறவினர்கள் அவசரமாக தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

எஃப்.ஐ.ஆர்-ல் பதிவு செய்துள்ளபடி, ஐஸ்வர்யாஜனவரி 3-ம் தேதி அவரது அறையில் இறந்து கிடந்தார். நவீன் ஜனவரி 7-ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தினர் கொலை செய்ததாக குற்றம் சாட்டியுளார்.

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அவரது தந்தை உட்பட 6 குடும்ப உறுப்பினர்களை போலீசார் விசாரணைக்காக கைது செய்து வைத்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலைக்கான தண்டனை) மற்றும் சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்ததாக 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினர் கூறுகையில்,  “போலீஸார் முன்பு அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஐஸ்வர்யா தனது பெற்றோருடன் செல்ல ஒப்புக்கொண்டார். உள்ளூர் அதிகாரிகளும் அவளது வயதைக் கருத்தில் கொண்டு பெற்றோருடன் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் இப்படி ஒரு சோகம் நடக்கும் என்று தெரியாது” என்று ஒரு அதிகாரி கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment