கன்னியாகுமரிக்கு நவம்பர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்ததை ஒட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள அனைத்து விடுதிகளையும் கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான காவலர்கள் தங்கும் வீடுகளில் யார், யார் தங்கியிருக்கிறார்கள் என்று ஆய்வு மேற்கொண்டனர்.
விவேகானந்தபுரம் அருகே ஒதுக்கு புறமாக உள்ள தங்கும் விடுதியில் ஒரு பெரிய கும்பல், மற்றும் 2 பெண்களுடன் தங்கியிருப்பதை அறிந்த காவல்துறை அவர்களில் சிலரை விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது . அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் பெட்டிகளுடன் விடுதியின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தப்ப முயன்றதை கண்டனர்.
காவல்துறையினர் விரைந்து செயல் பட்டு, இந்த கும்பல் தங்கியிருந்த அறைகளின் முன் வந்து கதவை தட்டி அறையில் இருந்தவர்களை சுற்றிவளைத்தனர்.
அதே நேரத்தில், மற்றொரு அறையில் இருந்த சிலர் பெரிய சூட்கேஸ்யை ஜன்னல் வழியாக லாட்ஜ்க்கு வெளியே தூக்கி வீசினர். இதை கண்ட காவல்துறையினர். புதர் நிறைந்த பகுதிக்குள் சென்று சூட்கேஸ்யை தேடி எடுக்க முயன்றபோது, அந்த புதர் பகுதியில் மறைந்திருந்த மூன்று இளைஞர்களை பிடித்தனர்.
காவல்துறை இந்த கும்பல் தங்கியிருந்த அறைகளை சோதனை செய்த போது, ஒரு அறையில் வேறு மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் மட்டுமே இருந்தனர். முதலில் இந்த பெண்கள் இருவரும் சுற்றுலா பயணிகள் என நினைத்த காவல்துறைம், விசாரித்த பிறகுதான், இரண்டு இளம் பெண்களும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிந்தது.
இரண்டு இளம் பெண்கள், பத்துக்கும் அதிகமான இளைஞர்கள், மற்றும் நடுத்தர வயதினர் என மொத்தம் 17 பேரையும் விசாரணைக்காக போலிசார் கன்னியாகுமரி காவல் நிலையம் அழைத்து சென்றனர்
பண இரட்டிப்பு கும்பல் தங்கியிருந்த அறைகளில் இருந்த மூன்று மடிக்கணினிகள், கம்ப்யூட்டர், 20-க்கும் அதிகமான கைபேசிகள், பதிவு செய்யாத புத்தம் புதிய வாகனத்துடன் சொகுசு வாகனம், மற்றும் ஒரு கார் என மூன்று கார்களை காவல்தூறையினர் கை பற்றினர். இந்த கும்பலின் தலைவனான மதுரையைச் சேர்ந்த சுந்தர பாண்டியனின் சொகுசு வாகனத்தில் .தி.மு.க. கொடியுடன் இருந்த நிலையில், காவல்துறை கொடியை அகற்றி விட்டு 17 பேர் கொண்ட கும்பல், மூன்று வாகனங்கள், 20-க்கு அதிகமான கைபேசிகள், மடிக்கணினி, கம்ப்யூட்டர், பணம் நிறைந்த சூட்கேஸ், பைகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
கும்பலின் தலைவன் சுந்தர பாண்டியன் மற்றும் இவருடைய கூட்டாளி ராஜாமணியை தனியாகவும், இரண்டு பெண்களை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெண் அதிகாரிகள், ஏனைய 13 பேரை சிறு, சிறு கும்பலாகவும் காவல் துறை விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். இதனிடைய, சில காவலர்கள் இரவு முழுவதும் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி முடித்தபோது அதில் 11 லட்சத்து 4_ஆயிரத்து 327 ரூபாய் இருந்துள்ளது.
இந்த கும்பலுக்கு மதுரை, அதன் சுற்று பகுதி ஊர்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு நிலையான முகவரியில் அலுவலகம் கிடையாது.
சுந்தரபாண்டியன், ராஜாமணி தலைமையில் ஊர்,ஊராக சென்று நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்குவது.அதில் ஒரு அறையை அலுவலகம் தோற்றத்தில் அமைத்துக்கொண்டு, இவர்களது முகவர்கள் அழைத்து வரும் நபர்களிடம் முதலில் இரண்டு பெண்கள் சொல்லும் ஆசை வார்த்தை, ரூ. 1 லட்சம் டெப்பாசிட் செய்தால் 5 மாதங்கள் கடந்து ரூ.5 லட்சமாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
இந்த டெப்பாசிட்டுகள் எல்லாம் (RB) ரிசர்வ் வங்கியின் சட்டப்படியான பரிமாற்றம் என கணினியில் இருக்கும் ரிசர்வ் வங்கி அடையாளம் மற்றும் அதிகாரியின் கை ஒப்பம் இருப்பதை போன்ற ஒரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள்.
இதை நம்பி பணம் கட்டும் மனநிலைக்கு வந்தவர்களை அடுத்த அறைக்கு அழைத்து போய், அங்கிருந்தவர்கள் சொல்லும் மயக்க வார்த்தை மகுடிக்கு மயங்கிய பாம்பு போன்ற நிலைக்கு வந்ததும், ஐந்து மாதத்தில் கிடைக்கப்போகும் பணத்தின் மதிப்பை எண்ணி பணம் கட்டி இதுவரை ஏமாந்தவர்கள் பல பேர் இருக்கலாம்.
கன்னியாகுமரியில் இந்த கும்பல் அதிகமாக பணம் செலுத்திய வர்களது பெயரில் குலுக்கல் நடத்தி, குலுக்கலில் எடுக்கும் சீட்டில் யார் பெயர் இருக்கிறதோ அவருக்கு புத்தம் புது கார் கொடுக்கும் நிகழ்வை, நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், விழா நடத்தும் முன்பே காவல்துறையின் கழுகு பார்வையில் சிக்கி சிறை சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் இடம் இந்த கும்பல் பற்றி கேட்டபோது. பள்ளியில் 10-ம் வகுப்பு வரை கூட படிக்காத சுதந்த ரபாண்டியன் சட்டத்திற்கு புறம்பாக கிடைக்கும் பணத்தாசை பிடித்த மக்களின் ஆசையை தனது தொழிலுக்கு மூலதனமாக திட்டமிட்டு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பணம் சம்பாதிக்க எளிய வழிகள் என திட்டமிட்டு பல லட்சம் சேர்த்தாலும், குற்றவாளிகள் என்றாவது ஒரு நாள் சட்டத்தின் முன் தண்டனை பெற்றே ஆகவேண்டும்.
பணியாளர்கள் என வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இந்த கும்பலுடன் இணைந்து விட்டார்கள்.
கன்னியாகுமரியில் கந்து வட்டி கும்பல் பற்றி பொது மக்களுக்கு தெரியும் தகவலை அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். புகார் கொடுத்தவர் பற்றிய ரகசியம் காக்கப்படும் என குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தெரிவித்தார்.
செய்தி: த.இ. தாகூர் - கன்னியாகுமரி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.