புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்; ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க ஜோசப் வந்தார். அப்போது திடீர் என்று, தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் நத்தமாடிபட்டியை சேர்ந்தவர் ஜோசப். விவசாயியான இவரின் நிலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகார் மீது போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Advertisment
இந்நிலையில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க ஜோசப் வந்தார். அப்போது திடீர் என்று, தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரின் உடலில் தண்ணீரை ஊற்றிய போலீசார் விசாரணைக்காக செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில், போலீசார் சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் உள்ளே செல்லஅனுமதிக்கப்படுவர்.
மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வரிசை ஒழுங்கு படுத்துதல், கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நீண்ட நேரம் நிற்காமல் இருக்க அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தல் என்று பல இடங்களில் போலீசார பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர்.
இத்தனையையும் கடந்து ஒருவர் பெட்ரோல் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து தீக்குளிக்க முயற்சி செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"