கொசு வலை பயன்படுத்தியதற்கு திட்டு... நாங்கள் அடிமையா? அதிகாரிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய போலீஸ் ட்ரைவர்

சமீபகாலமாக காவல்துறையில் உயர் அதிகாரிகள் சக காவலர்களை திட்டி மிரட்டும் ஆடியோ, காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி காவல்துறைக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.

சமீபகாலமாக காவல்துறையில் உயர் அதிகாரிகள் சக காவலர்களை திட்டி மிரட்டும் ஆடியோ, காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி காவல்துறைக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
Police

அண்மைக்காலமாக, காவல்துறையில் உயர் அதிகாரிகள் சக காவலர்களைத் திட்டி மிரட்டும் ஆடியோ மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், திருச்சியில் காவலர் ஒருவரைக் கொசுவலை பயன்படுத்தியதற்காக அதிகாரி ஒருவர் திட்டிய காணொளி இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisment

சமீபத்தில், சுதந்திர தின விழாவையொட்டி திருச்சியில் உள்ள சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த ஏ.ஆர். (Armed Reserve) ஓட்டுநர் ஒருவர் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க முழு சீருடையுடன் கொசுவலைக்குள் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த உதவி ஆணையர் (AC) ஜான் கென்னடி, அந்த ஓட்டுநரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் காணொளியில், அதிகாரி மற்ற காவலர்களிடம், குறிப்பாகப் பெண் காவலர்களிடம், "பணி நேரத்தில் அவர் கொசுவலைக்குள் அமர்ந்திருப்பதைப் பார்த்தீர்களா?" என்று மிரட்டும் தொனியில் கேட்டபடி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்கிறார். அதற்கு அந்த ஓட்டுநர் கோபத்துடன், "நான் என்ன அடிமையா? இன்று சுதந்திர தினம். எங்களைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள். ஏன் எங்களை அடிமைகளாகவே வைத்திருக்கின்றீர்கள்?" என்று ஆவேசமாகக் கேட்கிறார். மேலும், "நான் முறையாக சீருடை அணிந்துதான் இருக்கிறேன். கொசுவலை பயன்படுத்தியது தவறா?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

Advertisment
Advertisements

இந்தச் சம்பவம் குறித்து ஓட்டுநரின் தாய்தந்தையை அதிகாரி தரக்குறைவாகப் பேசியதாகவும் அந்தக் காணொளியில் குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கெனவே, திருச்சி மாநகர ஆணையர் ஓபன் மைக்கேல் ஒரு காவல் அதிகாரியிடம் பேசிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த காணொளியும் வெளியாகியுள்ளது காவல்துறைக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

உதவி ஆணையர் தனது செல்போனில் எடுத்த காணொளி எப்படி வெளியானது என்பது குறித்துக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. மேலும், யார் மீது தவறு இருக்கிறதோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: