Madurai High Court News in tamil - மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையுமின்றி சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்ட் 19 முதல் 20 வரை நடத்துவதற்கு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரினோம். இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், "கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும்.
இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே, சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை" எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி, வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil