6500 பேர் இணைப்பு: ஒருவருக்கு ரூ300 வீதம்; காவலர் குடும்பத்திற்கு உதவும் வாட்ஸ்அப் குருப்!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2017 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் ஒன்று கூடி இந்த குழுவை 2022 ஆண்டு ஆரம்பித்து அவர்களுக்குள் பணத்தை சேகரித்து அந்த குடும்பத்திற்கு ஒரு சிறு தொகையை உதவி செய்தனர்.

author-image
WebDesk
New Update
Police Whatsapp copy

தமிழ்நாடு முழுவதும் காவலர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால், உடல்நிலை சரியில்லாமல் போனால் நமக்குள் நாமே உதவி செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து வாட்ஸ்அப்  குழு ஒன்றை 2022 ஆண்டு ஆரம்பித்தனர். அதற்கு 2017 பேட்ச் கடலூர் காக்கும் உறவுகள் குழு என பெயர் வைத்தனர்.

Advertisment

இந்தக் குழு ஆரம்பிப்பதற்கு காரணம் என்னவென்றால், கடலூர் மாவட்டத்தில் பெரியசாமி என்ற காவலர் குடும்ப பிரச்சினை காரணமாக பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். அவரது துயர சம்பவத்தை போக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2017 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் ஒன்று கூடி இந்த குழுவை 2022 ஆண்டு ஆரம்பித்து அவர்களுக்குள் பணத்தை சேகரித்து அந்த குடும்பத்திற்கு ஒரு சிறு தொகையை உதவி செய்தனர்.

இதைப் பார்த்து பல காவலர்கள் இந்தக் குழுவில் இணைய ஆரம்பித்தனர். இது அனைத்து போலீசார் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தக் குழு தற்போது விரிவடைந்து தமிழ்நாடு முழுவதும் 6500 காவலர்கள் இந்தக் குழுவில் உள்ளனர். பணியில் இருக்கும் போது சக காவலர்கள் இறந்து விட்டால், ஒவ்வொரு காவலரும் தலா ரூ300 இந்த குழுவிற்கு அனுப்பி வைக்கின்றது. மொத்த பணத்தையும் சேகரித்து, இறந்து போன காவலர் குடும்பத்திற்கு இவர்களே ரூபாய் 25 லட்சம் கொடுத்து அந்த குடும்பத்தை மேல் நோக்கி தூக்கி விடுகின்றனர்.

Police Cudd

Advertisment
Advertisements

அதேபோன்று உடல்நிலை சரியாமல் போனால் அந்தந்த மாவட்ட சேர்ந்த காவலர்கள் ஒன்று கூடி ஒரு சிறு தொகையை கொடுத்து வருகின்றனர் அதன்படி தமிழக காவல்துறையில் சக காவலர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது அவர்களுக்கு வாட்ஸ் ஆப் குரூப் மூலம் நிதி திரட்டி, உதவி செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் நிலையத்தில் எழுத்தர் ஆக பணிபுரிந்து வரும் ஜே.சதீஷ்குமார் PC 249 என்பவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்,

அவருக்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்யும் பொருட்டு 2017 பேட்ச் கடலூர் காக்கும் உறவுகள் குழு ஒன்றிணைந்து வந்த உடனே ரூபாய்  1,68,950 பணம் நிதி குழு மூலம் திரட்டி, இன்று 19.02.2025 சகா காவலர்கள் அமர வர்மன், இராஜதுரை, பாலமுருகன், சந்தோஷ், பூபாலன், இராஜசேகர், பெண் காவலர்கள் அமலா, மாரியம்மாள் ஆகியோர்கள் சதீஷ்குமார் வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினார்கள் .மனிதநேயம் இன்னும் சாகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

Tamilnadu police

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: