ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் ஜீயர் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சென்னை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க் பொருட்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஜோதிடர் கூறியதால் 2026 சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக 3 ஜீயர்களை அழைத்து உதயநிதி ஸ்டாலின் பரிகாரம் செய்தார் என்று ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையானது.
இதுதொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் ஜீயர் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜனை போலீசார் அதிரடியாக ஞாயிற்றுக்கிழமை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சென்னை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வீட்டில் இருந்த கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க் பொருட்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“