/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-39.jpg)
Chain snatcher rescued
பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். நேற்று நள்ளிரவு (ஆகஸ்ட்18) இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 3 பேர், அவரது மனைவி மகாலட்சுமியிடம் அரிவாளை காட்டி, "சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம்" என மிரட்டி கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு தப்பித்தனர்.
பின்னர் மகாலட்சுமி சத்தம் போட்டதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் வீட்டில் வளர்த்த நாய்கள் கொள்ளையர்களை துரத்தி சென்றுள்ளது. இந்நிலையில் 300 மீட்டர் தூரத்தில் தோட்டத்தில் இருந்த சுமார் 60 அடி கிணற்றில் திருடன் ஒருவன் தவறி விழுந்தான்.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த திருடனை மீட்டு கைது செய்தனர்.
செயினைப் பறித்து ஓடி கிணற்றில் தவறி விழுந்த திருடன் மீட்பு #Coimbatorepic.twitter.com/7zmy6V42AD
— Indian Express Tamil (@IeTamil) August 19, 2023
மேலும் மற்றொரு திருடனை பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே தப்பிக்க முயன்றபோது கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி பகுதியில் சமீப காலமாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள், பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.