scorecardresearch

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து காரில் கடத்த முயன்ற ரூ.2லட்சம் மதிப்பிலான குட்காவை மண்ணச்சநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Police rs 5 lakh worth Gutkha seized, Police Gutkha seized in Tiruchi, Tiruchi news, latest tiruchi news, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல், ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல், திருச்சி, tiruchi, Gudkha seized

துறையூர் அருகே பெரம்பலூர் சாலை பகுதியில் துறையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்தப்போது, வாகனம் நிற்காமல் சென்றது. இதில் சந்தேகமடைந்த துறையூர் போலீசார் வாகனத்தை பிடிக்க துரத்தினர்.
போலீசார் பின் தொடர்வதை கண்டு கடத்தல் புள்ளிகள் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றனர். பின்னர் போலீசார் நெருங்கியதால் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

இதையடுத்து காரில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 57 மூட்டை குட்கா இருந்தது தெரியவநதது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். தொடர்ந்து குட்கா மற்றும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குட்கா பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டது உறுதியானது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி யாஸ்மின், முசிறி ஆய்வாளர் செந்தில்குமார், தொட்டியம் ஆய்வாளர் முத்தையன், மணச்சநல்லூர் ஆய்வாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட இரவு பணி காவலர்களால் மேற்படி வாகனம் மற்றும் புகையிலை குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவல் அதிகாரிகளை காவல்துறை திருச்சி சரக துணை தலைவர் மற்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் பாராட்டினார்கள்.

செய்தி: க. சண்முகவடிவேல் – திருச்சி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Police rs 5 lakh worth gutkha seized in tiruchi

Best of Express