/tamil-ie/media/media_files/uploads/2018/05/Kaala-Poster-11.jpeg)
Kaala Poster
தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க நேற்று விமானம் மூலம் சென்றிருந்தார் ரஜினிகாந்த். அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ரஜினிகாந்த்,அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் மக்கள் பயந்துபோய் உள்ளனர். தமிழகம் போராட்டக்களமாக மாறக்கூடாது. தொடர்ந்து போராட்டம் நடந்தால் தொழில் துறையினர் எவரும் தமிழகத்துக்கு வரமாட்டார்கள். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர்.தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்க வேண்டும். தூத்துக்குடி போராட்டம் கலவரமாக மாறியதற்குச் சமூக விரோதிகள் தான் காரணம்.” என்று கூறினார்.
ரஜினிகாந்த் கூறிய இந்தக் கருத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. தூத்துக்குடியில் போராடிய மக்களை ரஜினிகாந்த் இழிவுப்படுத்தியதாக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு கருத்து தெரிவித்துள்ளனர். பலர் ரஜினிகாந்த் தான் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்தின் கருத்தால் அரசியல் கட்சிகள் மட்டும் இல்லாமல், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.