கோவை சோதனை சாவடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு மீன் வண்டியில் கடத்தப்பட்ட 200கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தினமும் சரக்கு வாகனங்கள் மூலம் கேரளா மாநிலத்திற்கு கோவை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், இதில் சந்தேகத்துக்குரிய வாகனங்களை கலால் துறைய அதிகாரிகள் கோவை,வாளையார் சோதனை சோதனை சாவடியில் சோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று கர்நாடகா மாநிலம் பதிவு எண் கொண்ட மீன் வண்டியை கலால் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தின் முழுவதையும் சோதனை செய்தனர். இதில், மீன் பெட்டிகளுக்கு இடையில் மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த 200 கிலோ கஞ்சா பொட்டலங்களை கலால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க மீன் லோடு வண்டியை பயன்படுத்தி ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது. மேலும், க.க. சாவடி போலீசார் கஞ்சா கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”