விழுப்புரத்திற்கு அருகே உள்ள செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வரும் கார்த்திக்வேல் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த சரஸ்வதியை சந்தித்து, வாழ்த்து கூறி அவருடை பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று சென்னையில் இருந்து நேற்று கிளம்பிச் சென்றார் கார்த்திக்வேல்.
காதலியை சுட்டுக் கொன்ற போலீஸ் … தானும் தற்கொலை :
ஆனால் பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அந்த சண்டையில் ஆத்திரமடைந்த கார்த்திக்வேல், துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியை தலையில் சுட்டதாகவும். இதனால் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
காதலியை சுட்டுக்கொன்ற கார்த்திக்வேல், அந்த துயரம் தாங்காமல் அவரும் அதே துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பிறந்தநாளன்றே இரண்டு மரணம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில், உண்மையிலேயே காதல் தகராறில் தான் இந்த இரண்டு மரணங்களும் நடந்ததா என்றும், பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் கார்த்திக்வேல் துப்பாக்கி வைத்திருந்தது ஏன் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.