/indian-express-tamil/media/media_files/zkaQIkPYNf4NrcBQo4Jf.jpg)
கோவை ரங்கே கவுண்டர் பகுதியில் வசித்து வரும் 85 வயது மதிக்கத்தக்க ஜன்னிலா என்கிற மூதாட்டி மகளிர் உரிமைத் தொகை தனக்கு வரவில்லை என்றும் அதற்கான விபரத்தை அறிவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (டிச.11) வந்துள்ளார்.
விவரம் அறிந்து விட்டு நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை அங்கு பணியில் இருந்த
உதவி ஆய்வாளர் அன்பழகன் மூதாட்டியிடம் விசாரித்து வீட்டு முகவரியை கேட்டு கை தாங்கலாக கூட்டி சென்று சொந்த செலவில் ரூ.200 ஆட்டோக்கு கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த மூதாட்டியின் மகன் இறந்து விட்டார் என்பதும் இவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூதாட்டி நிலை அறிந்து தானாகவே முன்வந்து உதவிய எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டு
— Indian Express Tamil (@IeTamil) December 11, 2023
இடம்: கோவை ஆட்சியர் அலுவலகம் #Coimbatorepic.twitter.com/BR0wnVpkkP
மூதாட்டி நிலையறிந்து தானாகவே முன்வந்து உதவிய உதவி ஆய்வாளரின் செயல் அனைவரின் மத்தியில் பாராட்டையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.