Tuticorin SI Murder Tamil News : தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது மினிலாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
54 வயதான பாலு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது, வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது போதையில் சுற்றிய முருகவேல் என்பவரை பாலு கண்டித்ததாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த முருகவேல், பாலு மீது மினி லாரி ஏற்றிக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளார். தப்பி ஓடிய முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று போலீஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“