Advertisment

டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலருக்கு கொரோனா! காவல் நிலையம் அடைப்பு

கோயம்பேடு போன்று டாஸ்மாக் கடைகள் மூலமாக வைரஸ் பரவலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், இந்த செய்தி பலருக்கும் மேலும் கவலை அளிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Policeman who deployed for TASMAC bandobust infected with coronavirus in Arani

Policeman who deployed for TASMAC bandobust infected with coronavirus in Arani : 44 நாட்கள் ஊரடங்கு இழுத்து பிறகு தமிழகத்தில் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா சமூக பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிக் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ஆனால் அவர்களின் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி தமிழக அரசு மே 7-ஆம் தேதி மதுபான கடைகளை திறந்தது. பல்வேறு இடங்களில் போதுமான சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மதுப்பிரியர்கள் டாஸ்மாக்கில் இருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் படிக்க : பள்ளியில் வைத்து தரப்பட்ட டாஸ்மாக் டோக்கன்கள்! முதல்வர் மாவட்டத்தில் நடந்த அவலம்!

இந்நிலையில் நேற்று ஆரணியில் டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்தொற்று உறுதியானதால் காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் நேரடி மருத்துவ கண்காணிப்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கோயம்பேடு போன்று டாஸ்மாக் கடைகள் மூலமாக வைரஸ் பரவலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில், இந்த செய்தி பலருக்கும் மேலும் கவலை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Lockdown Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment