/indian-express-tamil/media/media_files/2025/06/23/policy-is-different-alliance-is-different-2025-06-23-18-24-34.jpeg)
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்டேனா? - எஸ்.பி.வேலுமணி விளக்கம்
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது;
கோவையில் சிறுவாணி அணையின் பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. 10 நாட்களில் எடப்பாடி பழனிச்சாமியின் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும் எனவும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது சிறுவாணி அணையில் 50 அடி நீர் தேக்கினார்கள், அதன்பிறகு 5 அடி குறைத்தார்கள், திமுக அரசு கோவை மாவட்டத்தை கண்டுகொள்வதில்லை. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சிறுவாணி அணையை தூர்வாருவதற்கு முயற்சி செய்யபட்டது. அரசு கிடப்பில் போட்டுள்ளது. மேலும் கேரளா அரசுக்குச் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என்று சட்டமன்றத்திலேயே பேசினேன். 50 அடி தேக்க வேண்டிய சிறுவானி அணையில் 40 அடி மட்டுமே தேக்குகிறார்கள், கண்டுகொள்வதில்லை.
பேரூரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பேரூர் ஆதீனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தொடர்பான கேள்விக்கு,
தமிழகத்துக்கு பெருமை தரக்கூடிய மகா சன்னிதானம் ராமலிங்க அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்ச்சிக்கு மருதாச்சலம் அடிகளார் அழைப்பு கொடுத்ததாகவும், ஆண்டுதோறும் அங்கு சென்று ஆசீர்வாதம் பெற்று வருவது வழக்கம். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த, நிலையில் அடிகளாரின் நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரை அழைத்துள்ளார்கள் எனவும் நூற்றாண்டு விழாவிற்கு எங்களை அழைத்தார்கள், அதற்காகத் தான் சென்றதாகவும், அதற்கும் ஆர்.எஸ். ஸ் -க்கும் தொடர்பு இல்லை. அடிகளாரின் நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் சிறப்பு அழைப்பாளராக வந்திருக்கிறார், அந்நிகழ்ச்சி எனது தொகுதியில் நடைபெறுவதால் எனக்கு அழைப்பு கொடுத்தார்கள். ஆர் எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்க மாட்டார்கள், நாங்களும் அவர்களை அழைக்க மாட்டோம். தி.மு.க. தனது கையாலாகதனத்தால், பெரிய மகானுடைய நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றதை திருத்தி கிளப்பி விடுகிறார்கள் இது மனசாட்சி இல்லாதவர்கள் செய்கிற வேலை.
ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்துக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, அவர் எப்போது பேசினாலும் பொய்மட்டும்தான் பேசுவார். ஆர்.எஸ்.பாரதி என்ன நடக்கிறது என்பது பார்த்து பேச வேண்டும். முருகன் மாநாட்டுக்கு எங்களது முன்னாள் அமைச்சர்கள் சென்றார்கள், அழைப்பு கொடுத்ததால் சென்றார்கள், அங்க போகும்போது அண்ணா குறித்தோ, பெரியார் குறித்தோ வீடியோ வெளியாவது தெரியாது. முருகன் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு, முருகன் மாநாட்டுக்கு சென்றதில் தவறு இல்லை.
ஆர்.எஸ்.பாரதி 1999-ல் பாஜக கூட்டணியில் இருந்தபோது தெரியாதா? என கேள்வி எழுப்பிய எஸ்.பி.வேலுமணி, கடந்த 2024-தேர்தலின் போது அண்ணா குறித்து பேசியதற்கு எவ்வாறான துணிச்சலான முடிவு எடுத்தால் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூட்டணி வேறு. கொள்கை வேறு. குறிப்பாக எங்களது தலைவர் எடப்பாடி கொள்கையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். வக்பு போர்டு சட்டம் வருவம் போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, கூட்டணி எதிராக வாக்களித்தை சுட்டிக்காட்டினார்.
இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது, அதனால் என்னவேணாலும் பேசி திசை திருப்ப பார்க்கிறார்கள், அதிமுக,பாஜக கூட்டணி அமைந்தபிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி விடுவார் என்ற அச்சத்தில் கிளப்பி விடுகிறார்கள் எனவும் திமுக போல, ஆர்எஸ் பாரதி, போல சுயநலம் இல்லாத கட்சி அதிமுக எனவும். எப்போதும் சிண்டு முடியும் வேலையதான் ஆர்.எஸ்.பாரதி பார்க்கிறார்கள், வயதாகி விட்டது என தெரிவித்தார்.
நாங்கள் தேர்தலுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். ஆனால் என்றைக்கும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் அதிமுக எப்போதும் எடப்பாடி தலைமையில் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை இயக்கமாக இருக்கும் எனவும் இன்னும் அதிகமான கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.