தமிழகம் முழுவதும் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமபுறங்களில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, வீடு முற்றங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் சமையலறையில் பொங்கல் வைத்து, கடவுளை வழிபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லாததால், மக்கள் தங்கள் குடும்பங்களுடன், வீடுகளிலேயே எளியாமையாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற ஜல்லிகட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில், சிறந்த காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா ட்வீட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து!
அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். pic.twitter.com/UjeNVBXsEH
— Amit Shah (@AmitShah) January 14, 2022
இயற்கையுடனான நமது பிணைப்பும், நமது சமுதாயத்தில் சகோதரத்துவ உணர்வும் ஆழமாக இருக்க பிரார்த்திக்கிறேன்- தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து!
Pongal is synonymous with the vibrant culture of Tamil Nadu. On this special occasion, my greetings to everyone and especially the Tamil people spread all over the world. I pray that our bond with nature and the spirit of brotherhood in our society are deepened. pic.twitter.com/FjZqzzsLhr
— Narendra Modi (@narendramodi) January 14, 2022
தமிழ் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!
தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!
கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். pic.twitter.com/m02TEXBjUM— M.K.Stalin (@mkstalin) January 14, 2022
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் வாழ்த்து!
உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில் ,தமிழர்கள் இல்லங்களில் அன்பும்,அமைதியும்,வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும்.
அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.#பொங்கல்2022 pic.twitter.com/nD3AkKI8qH— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 14, 2022
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து!
என் அன்பார்ந்த தமிழ் மக்களே,
உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
சாதி மத வேறுபாடின்றி, ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமின்றி, படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நன்றியுணர்வு என்னும் ஒரே நோக்கத்தோடு இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாளாம், pic.twitter.com/xqOFLJkBZV— O Panneerselvam (@OfficeOfOPS) January 14, 2022
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து!
தை பிறந்தால் வழி பிறக்கும்!
புதிய எண்ணத்-தை
புதிய செயல் திறத்-தை
நல்ல உடல் நலத்-தை
மாசிலா குடும்ப வளத்-தை
மகிழ்ச்சியான உள்ளத்-தை
குறைவில்லா செல்வத்-தை
பிறக்கும் தை-மகள்,
சிறப்பாய் கொடுக்கட்டும்.
மனமகிழ்ச்சியும், மனநிறைவும் மனையில் நிலைக்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/K3E2GF5SpE— K.Annamalai (@annamalai_k) January 14, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.