தமிழகம் முழுவதும் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமபுறங்களில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, வீடு முற்றங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் சமையலறையில் பொங்கல் வைத்து, கடவுளை வழிபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லாததால், மக்கள் தங்கள் குடும்பங்களுடன், வீடுகளிலேயே எளியாமையாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற ஜல்லிகட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில், சிறந்த காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா ட்வீட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து!
இயற்கையுடனான நமது பிணைப்பும், நமது சமுதாயத்தில் சகோதரத்துவ உணர்வும் ஆழமாக இருக்க பிரார்த்திக்கிறேன்- தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து!
தமிழ் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் வாழ்த்து!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “