பொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்!

இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க

இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொங்கல் கொண்டாட்டம்:  அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர்,  தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து:

பிரதமர் மோடி:

தனது ட்விட்டர் பக்கத்தில் மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என குறிபிட்டுள்ளார்

Advertisment
Advertisements

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:

மகிழ்ச்சி நிறைந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நன்னாளில் நாம் இயற்கையோடு மகிழ்ச்சி கொள்கிறோம். அபரிமிதமான வளமையை நம் மீது பொழிந்ததற்காக சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, ``பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்:

அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், பொங்கல் திருவிழாவுடன் – தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடி மகிழுங்கள் என்றும் எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும் என்றும், அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்:

இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

தாய் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும் தரணிவாழ் தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கேற்ப தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் துயரங்களுக்கும் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. அனைவரது துயரங்களும் தீர வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் செழிக்க வேண்டும்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி :

தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்" என தமிழில் தெரிவித்துள்ளார்.

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து பல திட்டங்களைத் தீட்டிய ஜெயலலிதாவை பொங்கல் நன்னாளில் நினைவுகூர்கிறேன். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பொங்கல் திருநாளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களா? விவசாயிகள் ஒவ்வொரு நாளும் போராடக் களத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு நாம் பசியாறத் தொடர்ந்து உணவளிக்கும் விவசாயிகளை வணங்குவோம்.

Pongal Festival Happy Pongal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: