/indian-express-tamil/media/media_files/2025/10/08/kovai-senthil-2025-10-08-14-02-59.jpg)
'கோவை கோட்டை எங்களது'... தி.மு.க. அமைச்சர்கள் முன் அ.தி.மு.க.வினர் முழக்கத்தால் பதற்றம்!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல்லில் இன்று மாலை நடைபெறும் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னை வழியாக கோவை விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க அ.தி.மு.க. தொண்டர்கள் விமான நிலையத்தில் பெருமளவில் திரண்டிருந்தனர்.
அதே நேரத்தில், நாளை கோவையில் நடைபெறவுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாலம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக அமைச்சர்களான எ.வ. வேலு, அன்பரசன், காந்தி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.
'கோவை கோட்டை எங்களது'... தி.மு.க. அமைச்சர்கள் முன் அ.தி.மு.க.வினர் முழக்கத்தால் பதற்றம்#Coimbatore#Admk#Dmkpic.twitter.com/Jq7iAgo2jq
— Indian Express Tamil (@IeTamil) October 8, 2025
அப்போது, தி.மு.க. அமைச்சர்களைப் பார்த்த அ.தி.மு.க.வினர் திடீரெனக் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அவர்கள், "எடப்பாடியார் வாழ்க", "அ.தி.மு.க. வாழ்க", "கோவை கோட்டை எங்களது" என்று உரத்த குரலில் முழக்கமிட்டனர். இதனால், கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.