Chennai News Highlights: மழை பாதிப்பு - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு

Tamil Nadu Latest Live News Update in Tamil 24 October 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 24 October 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rain

மழை பாதிப்பு - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மத்திய குழு நாளை ஆய்வு

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மத்திய குழு நாளை ஆய்வு:  விளை நிலங்களில் மழை பாதிப்பு குறித்து செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டையில் மத்திய குழு நாளை ஆய்வு செய்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, மதுரை, தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒன்றியக் குழு ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் அக். 27ம் தேதி ஒன்றியக் குழு ஆய்வு செய்கிறது. நெல்லின் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். ஒன்றிய வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் ஆய்வு செய்கிறது.

  • Oct 25, 2025 07:20 IST

    தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மத்திய குழு நாளை ஆய்வு

    விளை நிலங்களில் மழை பாதிப்பு குறித்து செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டையில் மத்திய குழு நாளை ஆய்வு செய்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, மதுரை, தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒன்றியக் குழு ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் அக். 27ம் தேதி ஒன்றியக் குழு ஆய்வு செய்கிறது. நெல்லின் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். ஒன்றிய வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் ஆய்வு செய்கிறது.



  • Oct 24, 2025 23:46 IST

    சிறுமியை கடித்து குதறிய நரி

    கண்ணூரில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மத்தியில் புகுந்த நரி, 9 வயது சிறுமியின் கையை கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Oct 24, 2025 21:05 IST

    ஜம்மு காஷ்மீர் 4 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியீடு

    ஜம்மு காஷ்மீரியில் நடைபெற்ற 4 மாநிலங்களவைக்கான தேர்தலில், 3 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றது. 3 வேட்பாளர்களை நிறுத்திய எதிர்கட்சியான பாஜக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.



  • Oct 24, 2025 20:33 IST

    விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி

    சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி நடந்துள்ளது. ஓடுபாதைக்கு விமானம் சென்றபோது அவசர கால கதவை திறக்க முயன்ற குஜராத்தை சேர்ந்த பயணி லட்சுமணன் என்பவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



  • Oct 24, 2025 20:32 IST

    2026 தேர்தல் தி.மு.க -த.வெ.க இடையேதான் போட்டி - டி.டி.வி தினகரன்

    தமிழகத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக, தவெக இடையேதான் போட்டி. தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம்; யாரும் கணிக்க முடியாத அளவுக்கு புதிய கூட்டணி உருவாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.



  • Oct 24, 2025 19:34 IST

    அன்புமணி தரப்பு இல்லை, அது ஒரு கும்பல் - ராமதாஸ் விமர்சனம்

    அன்புமணி தரப்பு இல்லை, அது ஒரு கும்பல்; சின்னம் எங்களுக்கு என சொல்லிக்கொண்டு தான் வருவார்கள், சிலநாள் கழித்து முகத்தை தொங்க போட்டு செல்வார்கள் என அன்புமணி தரப்பினர் கட்சியின் சின்னத்தை கோருவது குறித்து ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.



  • Oct 24, 2025 18:21 IST

    முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு

    ராமநாதபுரம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 13 கிலோ எடையிலான தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி குரு பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 24, 2025 18:14 IST

    டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி!

    டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. பணிக்கு வரவும், பணி முடிந்து திரும்பவும் போக்குவத்து வசதி, அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Oct 24, 2025 17:51 IST

    10,12 வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணையை நவம்பா் 4ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல்

    10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணையை நவம்பா் 4ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைமைச்செயலகத்தில் முதல்வாிடம் இன்று அனுமதி பெறப்பட்ட நிலையில் நவ.4ல் தோ்வு அட்டவணையை வெளியிடத்திட்டமிடப்பட்டுள்ளது.



  • Oct 24, 2025 17:44 IST

    பைசனை பாராட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ!


    ”நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குநர் யார் என்று தேட வைத்தது. நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள். நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டித் தழுவுகிறேன் மாரி செல்வராஜ்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொலைபேசியில் தன்னை அழைத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாராட்டி உச்சி முகர்ந்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.



  • Oct 24, 2025 17:08 IST

    "நல்ல நாளுக்காக காத்திருக்கிறேன்" - ஆர்.ஜே.பாலாஜி

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, கருப்பு படத்தின் பணிகள் 75% நிறைவு கருப்பு படம் விரைவில் வெளியாகும்.. நல்ல நாளுக்காக காத்திருக்கிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.



  • Oct 24, 2025 17:07 IST

    ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரிய தமிழக அரசு

    சென்னை கிண்டியில் ரூ.6 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.



  • Oct 24, 2025 17:03 IST

    காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்

    சென்னை பல்லாவரம் வார சந்தையில், காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி, மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்து அழித்தனர். உணவுப் பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே விற்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.



  • Oct 24, 2025 16:21 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 குறைந்தது. காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் சவரன்னு ரூ.1120 குறைந்து கிராமுக்கு ரூ.11,400க்கும் சவரன் ரூ.91,200க்கு விற்பனையாகிறது.



  • Oct 24, 2025 15:19 IST

    விஜயை சிலர் கூவி கூவி அழைக்கின்றனர்; அதை விஜய் ஏற்றுக்கொண்டால் தற்கொலைக்கு சமம் – டி.டி.வி தினகரன்

    விஜயை சிலர் கூவி கூவி அழைக்கின்றனர். அதை விஜய் ஏற்றுக்கொண்டால் தற்கொலைக்கு சமம். கூட்டணிக்கு விஜய் ஒப்புக்கொண்டால் பா.ஜ.க.,வை அ.தி.மு.க விட்டுவிடும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருப்பத்தூரில் பேட்டி அளித்தார்



  • Oct 24, 2025 15:16 IST

    தேவர் தங்க கவசம் - நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு

    அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெறும் நிலையில், இந்தியன் வங்கியில் பாதுகாக்கப்படும் 13 கிலோ தங்க கவசத்தை வாங்கி முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் ஒப்படைத்தனர்



  • Oct 24, 2025 14:48 IST

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது? வெளியான முக்கிய தகவல்

    10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைத்துள்ளார். இந்தநிலையில் பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது



  • Oct 24, 2025 14:36 IST

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • Oct 24, 2025 14:33 IST

    தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

    சென்னை, புழுதிவாக்கம் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவியை மாப்பு கட்டையால் தாக்கிய தலைமை ஆசிரியை இந்திரா காந்தியை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்



  • Oct 24, 2025 14:13 IST

    சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை - நயினார் நாகேந்திரன்

    தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏறி திறப்பு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை சொல்லி இருக்கிறார். சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்



  • Oct 24, 2025 14:12 IST

    மதுரை - துபாய் விமான சேவை ரத்து

    மதுரையில் இருந்து துபாய் செல்லும் தினசரி விமானத்திற்கு, இன்று ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது



  • Oct 24, 2025 13:58 IST

    மருது பாண்டியர்களின் நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் பதிவு!

    ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! 



  • Oct 24, 2025 13:29 IST

    புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை பார்வையிட்ட ஸ்டாலின்.



  • Oct 24, 2025 13:26 IST

    திட்டத்தில் மாற்றம்: விஜய் - கரூர் சந்திப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரது குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து தனியார் அரங்கில் வைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கரூர் சென்று சந்திக்கும் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது



  • Oct 24, 2025 13:01 IST

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

    "கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலினும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் பேசி பொம்மிசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை திட்டவட்டமாக எடுக்க நடவடிக்கை வேண்டும்" என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த விஷயத்தில் தி.மு.க. அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மௌனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



  • Oct 24, 2025 12:57 IST

    மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு, வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.



  • Oct 24, 2025 12:52 IST

    பன்றி பண்ணைக் கழிவால் பழங்குடியினர் பாதிப்பு

    கன்னியாகுமரி: கேரளப் பகுதியில் உள்ள ஒரு பன்றி பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுநீர், தமிழக நீரோடையில் கலந்து செல்வதால், அதனைச் சார்ந்து வாழும் பழங்குடியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Video: Puthiya Thalaimurai 



  • Oct 24, 2025 12:25 IST

    சபரிமலை கோவில் தங்கம் திருட்டு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் திருடப்பட்ட தங்கம் சுமார் 476 கிராம், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவர்த்தன் என்பவருக்குச் சொந்தமான ரோதம் ஜுவல்லரி மூலம் இந்த தங்கம் விற்கப்பட்டதாகவும், சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தப் பணப் பரிவர்த்தனைக்கு இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும் எஸ்.ஜே. விசாரணையில் தெரியவந்துள்ளது.



  • Oct 24, 2025 12:17 IST

    தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவக்கம் - தேர்தல் ஆணையம்

    தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணிகள் அடுத்த வாரம் தொடங்கும்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்



  • Oct 24, 2025 11:21 IST

    ஆந்திரா ஆம்னி பஸ் தீ விபத்து - நிவாரணம் வழங்க மோடி உத்தரவு

    ஆந்திரா ஆம்னி பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.



  • Oct 24, 2025 11:20 IST

    சட்டப்பேரவை தேர்தல் - 5 சின்னங்களை தேர்வு செய்த த.வெ.க?

    சட்டப்பேரவை தேர்தலுக்காக இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 5 சின்னங்களை த.வெ.க சார்பில் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பாக விண்ணப்பம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 24, 2025 10:53 IST

    புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்கா - திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொல்காப்பியர் பூங்கா ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அதனை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.



  • Oct 24, 2025 10:30 IST

    சென்னை அடையாறு முகத்துவாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்



  • Oct 24, 2025 10:19 IST

    மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை - களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா

    நாளை தொடங்கும் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார் செளராஷ்டிரா அணி வீரர் ரவீந்திர ஜடேஜா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்வு செய்யப்படாத நிலையில் ரஞ்சி போட்டிகளில் களமிறங்குகிறார்.



  • Oct 24, 2025 10:16 IST

    வெனிசுலாவை தாக்க அமெரிக்கா திட்டம்? இராணுவத்தை குவித்து வரும் ட்ரம்ப்

    அமெரிக்காவில் போதைப்பொருள் ஊடுருவல்களுக்கு வெனிசுலாவை காரணம் காட்டிவரும் அதிபர் ட்ரம்ப், அந்நாடு அருகே உள்ள கடல் பகுதிகளில் தனது ராணுவத்தை குவித்து வருகிறார்.  இந்நிலையில், அமெரிக்கா விரைவில் தாக்குதல்களை தொடுக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால் 5,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய தயாரிப்பு  எல்.ஜி.எல்.ஏ.எஸ் விமான எதிர்ப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்துள்ளது வெனிசுலா



Tamil News Update Tamil News Live Update Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: