/indian-express-tamil/media/media_files/2025/08/05/pmk-ramadoss-phone-hack-complaint-police-tamil-news-2025-08-05-10-30-08.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
த.வெ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்தாலும் இ.பி.எஸ் தான் முதலமைச்சர் - கெளதமி
த.வெ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளர் கெளதமி தெரிவித்துள்ளார்.
- Oct 19, 2025 22:00 IST
‘நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்’ - டாக்டர் ராமதாஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள். மக்களிடையே மனிதநேயம் மலர்ந்திட, மாற்றங்கள் தொடர்ந்திட, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, அன்பு, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை பெருகிட, இல்லாமை என்னும் இருள் விலகி, இன்ப ஒளி பிரகாசித்து, இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பும், ஆனந்தமும் செழித்து, மக்கள் யாவரும் மாசில்லாத தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடிட உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்.” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- Oct 19, 2025 20:25 IST
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகை, தேனி, தென்காசி, நீலகிரி, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர், திருவாரூர் ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 19, 2025 20:21 IST
மரண தண்டனைக்கு எதிரான 8.8 லட்சம் கருணை மனுக்கள் நிலுவை: விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நாடு முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக நிலுவையில் உள்ள 8.8 லட்சம் கருணை மனுக்களை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சுமார் 3.4 லட்சம் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 86,000 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
- Oct 19, 2025 19:16 IST
மழையால் காவிரிக் கரையோரப் பகுதிகள் பாதிப்பு என இ.பி.எஸ் கூறுவது தவறான செய்தி - ஸ்டாலின்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தேனி, விருதுநகர், இராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. அதிக கனமழை பெய்த இடத்திலும் இதுவரை எந்தவிதமான அபாயமும் ஏற்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் காவிரிக் கரையோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தவறான செய்தி கூறுகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், மழை பாதிப்புகளைச் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
- Oct 19, 2025 18:46 IST
போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் - காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- Oct 19, 2025 18:22 IST
மாரி செல்வராஜ்-க்கு திருமாவளவன் புகழாரம்
மாரி செல்வராஜ் இன்னும் இன்னும் உயர்ந்த இடத்திற்குச் செல்வார் என்பதை உறுதிப்படுத்தும் படமாக ’பைசன்’ உள்ளது என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
- Oct 19, 2025 18:20 IST
29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர். புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி உட்பட 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- Oct 19, 2025 17:42 IST
நேரடி நெல் கொள்முதலில் தி.மு.க மீண்டும் நாடகம் – இ.பி.எஸ்
டெல்டா மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகிப் போவதுடன் சுமார் 30 லட்சம் மூட்டை நெல்மணிகள் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைத்து மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.
நாகையில் தொடர் மழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் வீணாகி வருகிறது. இதைக் கண்டு விவசாயிகள் தமிழகம் முழுக்க சாலை மறியல், பஸ் மறியல் செய்யும் காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. மதுரை மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த செப்டம்பர் மாதமே திறப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டும், இதுவரை ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைக் கூட திறக்கவில்லை. நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க அரசு மீண்டும் நாடகமாடுகிறது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Oct 19, 2025 16:58 IST
அக். 23 முதல் 25 வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைப் பொழிவு இயல்பை விட 58% அதிகமாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கோத்தகிரி, அருப்புக்கோட்டை, கோவில்குளம், மற்றும் மக்கினம்பட்டி ஆகிய பகுதிகளில் 14 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. மேலும், நெல்லை மாவட்டத்தில் மட்டும் மழைப்பொழிவு இயல்பை விட 254% அதிகமாகப் பெய்துள்ளது. வரும் அக்டோபர் 23 முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
- Oct 19, 2025 16:39 IST
நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா அளித்த தகவலின்படி, நாளை (அக்டோபர் 20) தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஒரே நேரத்தில் 2 கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
- Oct 19, 2025 16:35 IST
வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
சென்னைக்கு அருகே உள்ள பட்டாபிராமில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தீபாவளிக்காகப் பட்டாசு வாங்க வந்த திருநின்றவூரைச் சேர்ந்த நத்தம்பேடு யாசின் உட்பட விபத்தில் சிக்கிய 4 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- Oct 19, 2025 16:15 IST
அமைச்சர் சிவசங்கர் பேட்டி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளது.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி
- Oct 19, 2025 15:58 IST
தமிழகத்தில் 4 இடங்களில் மிக கனமழை பதிவு
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 இடங்களில் மிகக் கனமழையும், 17 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. மேலும், தெற்குக் கேரளா மற்றும் குமரி கடலை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- Oct 19, 2025 15:56 IST
நெல்லை மாவட்டத்தில் பருவமழை தற்போது வரை 254% அதிகம்
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போதைய நிலவரப்படி இயல்பை விட 254% அதிகமாகப் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தகவல் தெரிவித்துள்ளார்.
- Oct 19, 2025 15:54 IST
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது உருவான பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மீன்பிடிக்கச் சென்ற அனைத்து மீனவர்களும் வரும் 21-ஆம் தேதி காலைக்குள் பத்திரமாக உடனடியாகக் கரைக்குத் திரும்ப வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
- Oct 19, 2025 15:53 IST
குமுளி மலைப்பாதையில் சாலையில் பிளவு
தேனி: தமிழ்நாடு - கேரளா இணைப்புச் சாலையான குமுளி மலைப்பாதையில் மழையால் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 19, 2025 15:51 IST
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைக் கடந்து 54,509 வாகனங்கள் சென்றுள்ளன. மேலும், கடந்த மூன்று நாட்களில் மொத்தம் 1.22 லட்சம் வாகனங்கள் இந்தச் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 19, 2025 15:49 IST
மரத்தில் மோதி விபத்து
ஈரோடு: ஆத்தூர் அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- Oct 19, 2025 15:32 IST
செல்ஃபி மோகத்தால் நேர்ந்த துயரம்
உளுந்தூர்பேட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் ரயில் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் சதிஷ்குமாரின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- Oct 19, 2025 15:20 IST
பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசிய நடிகர் அஜ்மல் அமீர்?
அஞ்சாதே, கோ, கோட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகர் அஜ்மல் அமீர், பெண் ஒருவருடன் பாலியல் ரீதியாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
- Oct 19, 2025 14:49 IST
புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில், சாராய பாட்டில்கள் பறிமுதல்
தீபாவளியை ஒட்டி புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில், சாராயம் ஆகியவை கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மது, சாராயம் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Oct 19, 2025 13:53 IST
அக்டோபர் 23ம் தேதி 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுப்பு
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 23ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அக்.21, 22, 24ம் தேதிகளில் சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- Oct 19, 2025 13:11 IST
சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமான பொறியாளர்கள் இயந்திர கோளாறை சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 109 பேர் உயிர் தப்பினர்.
- Oct 19, 2025 12:33 IST
திருப்திகரமான சேவை - சென்னை மெட்ரோ முதலிடம்
பயணிகளுக்குத் திருப்திகரமான சேவை வழங்கும் மெட்ரோ நிறுவனங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோ எனும் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் திருப்தி குறித்த ஆய்வை நடத்தியது. உலகெங்கிலும் சுமார் 32 ரயில் நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது. - Oct 19, 2025 11:43 IST
ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை
விழுப்புரம் தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கும், சென்னை தியாகராயா நகரில் உள்ள அன்புமணி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலையடுத்து தைலாபுரம் இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது.
- Oct 19, 2025 11:28 IST
பெற்றோரை புறக்கணித்தால் சம்பள பிடித்தம் - ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
அரசு பணியாளர்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால் சம்பளத்தில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அது நேரடியாக பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும் அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
- Oct 19, 2025 11:06 IST
ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம் - 70 லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம்
நியூயார்க்கில் நோ கிங்ஸ் என்ற முழக்கத்துடன் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி கண்டன குரல் எழுப்பினர்.
- Oct 19, 2025 10:42 IST
ஊழல் குற்றச்சாட்டு - அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி பதவி நீக்கம்
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பதிவாளர் பிரகாஷ் மற்றும் 12 அலுவலர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- Oct 19, 2025 10:19 IST
2-வது முறையாக 100 அடியை எட்டிய பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டியது. பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் 105 அடி உயரம் கொண்ட அணையில் நீர் மட்டம் 100ஐ தொட்டது. அணையில் நீர் இருப்பு 28.79 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது.
- Oct 19, 2025 10:18 IST
கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த சில நாட்களாக நகரில் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அதனை ஒட்டிய நீர் வழித் தடங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி சிறுவாணி அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 35 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. அணையின் நீர்த்தேக்கம் உயரம் 50 அடியாாகும். இன்று காலை 36.74 அடியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 9.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- Oct 19, 2025 10:14 IST
சீமான் மீது 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு
நீதிமன்ற உத்தரவை அடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் செய்த முறையீட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
- Oct 19, 2025 10:13 IST
நிறைவுற்ற வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் பணிகள் - டிசம்பரில் செயல்பாட்டு வரும்?
ரூ.730 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாள அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, வேளச்சேரிக்கும் பரங்கிமலை இடையே மவுண்டுக்கும் இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடம் இறுதியாக டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - Oct 19, 2025 09:47 IST
மீன்வளத்துறை எச்சரிக்கை
வங்கக்கடலில் நாளை மறுதினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், கடலூரில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Oct 19, 2025 09:30 IST
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 10,374 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 119 அடியாகவும் நீர் இருப்பு 91.883 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 1500 கன அடிக்கு நீர் வெளியேற்றப்படுகிறது.
- Oct 19, 2025 09:30 IST
தமிழ்நாட்டில் அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் கணிப்பு!
தமிழ்நாட்டில் அக்டோபர் 22,23 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- Oct 19, 2025 09:07 IST
மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி - குன்னுர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- Oct 19, 2025 08:34 IST
தீபாவளி கொண்டாட்டம் - சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி படையெடுத்த 7 லட்சம் மக்கள்
நாளை நாடு முழுவதும் நாளை (அக். 20) தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகையை கொண்டாட சென்றுள்ளனர். இதனால், மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- Oct 19, 2025 08:28 IST
த.வெ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்தாலும் இ.பி.எஸ் தான் முதலமைச்சர் - கெளதமி
த.வெ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளர் கெளதமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.