ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டமான இன்று பொதுமக்கள் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியின்போது திடீரென கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கலவரக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசினர். ஆனாலும், பல்லாயிரக்கணக்கான கலவரக்காரர்கள் திரண்டதால், அவர்கள் போலீசாரையும், வஜ்ரா வாகனத்தையும் விரட்டியடித்தனர். அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பிலும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
பின், ஆட்சியாளர் அலுவலகத்துக்குள் புகுந்த கலவரக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டம் வன்முறையாக மாறியிருக்கும் நிலையில், 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் குறித்த Live Updates-ஐ அறிய தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸுடன் இணைந்திருங்கள்.
மாலை 06.50 - செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டிருந்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் வேதனையானது. ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது" என்றார்.
மாலை 06.30 - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாலை 06.15 - காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டரில், " தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டது மாநில அரசின் தூண்டுதலில் நடத்தப்பட்ட தீவிரவாதம். குடிமக்கள் போராடுவதற்காக சுட்டுக்கொல்லப்படுவது நீதிக்கு எதிரானது என ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு
The gunning down by the police of 9 people in the #SterliteProtest in Tamil Nadu, is a brutal example of state sponsored terrorism. These citizens were murdered for protesting against injustice. My thoughts & prayers are with the families of these martyrs and the injured.
— Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2018
மாலை 05.00 - நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமரே, இப்போதாவது உங்கள் மௌனத்தை கலையுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
:( :( :( RIP pic.twitter.com/d10G256HAa
— Vishal (@VishalKOfficial) May 22, 2018
மாலை 04.45 - நடிகர் ரஜினிகாந்த் சார்பில், ரஜினி மக்கள் மன்றம் ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - தலைவர் ரஜினிகாந்த்
— ரஜினி மக்கள் மன்றம் | Rajini Makkal Mandram (@rmmoffice) May 22, 2018
மாலை 04.15 - பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 03.45 - தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதின் விளைவாக 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலையினால் பேரழிவை எதிர்கொண்டிருக்கிற மக்கள் ஒன்றுபட்டு போராடி வருகிறார்கள். மக்களுக்கு அழிவை ஏற்படுத்துகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பதில் மக்களைக் கொன்றுக் குவிக்கும் தமிழக அரசின் செயல் மிகக் கொடுமையானதாகும்.
போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் கொதித்தெழவேண்டும். இந்த நச்சு ஆலையை இழுத்து மூடும் வரை மக்கள் போராட்டம் தொடரவேண்டிய நிலையை ஏற்படுத்தவேண்டாம் என மத்திய - மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற்பகல் 03.28 - 'பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல்துறை வாகனங்களுக்கு தீயிட்டும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும், ஆட்சியர் அலுவலகத்தை கல் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு சட்டப்பூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 03.20 - டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சர்வாதிகார பழனிசாமியின் அரசிற்கு எனது கடும் கண்டனம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சர்வாதிகார பழனிசாமியின் அரசிற்கு எனது கடும் கண்டனம் pic.twitter.com/59eSM3QH62
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 22, 2018
மதியம் 03.10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைதியாக போராடுகிற மக்கள் மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இத்தகைய அராஜக நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
மதியம் 3.00 : "ஸ்டெர்லைட் ஆலையை மூட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மூட காலம் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது அரசின் கடமை " தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்.
,
தூத்துக்குடியில் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்@iVijayakant | #SterliteProtest pic.twitter.com/SrUTlqI2Vk
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 22, 2018
மதியம் 2. 50: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை !
,
வன்முறைகளை கையாண்டு மக்களை ஒடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவது கண்டித்தக்கது - தூத்துக்குடி போராட்ட வன்முறை குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் கண்டன அறிக்கை#SterliteProtest | @realsarathkumar pic.twitter.com/03JbbqHCcm
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 22, 2018
மதியம் 02.35 - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், "ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. மக்கள் தங்களது நலனுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை முடக்க காவல் துறையை அரசு ஏவி உள்ளது. ஸ்டெர்லைட்டின் கைக்கூலியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
இதற்கு பின்னால் பா.ஜ.கவும் செயல்படுகிறது. அதனால் தான் நான் போராட்டம் நடத்தும் போதும் என்னை பா.ஜ.கவினர் கல்வீசி தாக்கினர். ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் தூத்துக்குடியில் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும்'' என்றார்.
மதியம் 02.25 - கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில், "குடிமக்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்போது அரசின் ஆணையினால்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) May 22, 2018
மதியம் 02.30 - சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் என டி.ஜி.பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதியம் 02.20 - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், "போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருப்பது, கண்ணீர்புகைக் குண்டு வீசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; வேதனையளிக்கிறது. தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்ததாக வேண்டும். போராடுபவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்." என்றார்.
மதியம் 02.15 - செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை அழைத்து இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக சூழ்நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் எந்தவித முயற்சியிலும் தமிழக அரசு ஈடுபடாத காரணத்தால் போராடிகொண்டிருந்த அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றுத்திரண்டு இன்று ஒரு மிகப்பெரிய மக்கள் பேரணியை நடத்தி உள்ளனர்.
#SterliteProtestMay22nd2018 #SterliteProtest @peopleswatch #Reportfromgroundzero Appeal to all political parties to intervene with @CMOTamilNadu & ensure peace restored & no further loss of lives..announce urgently permanent closure of Sterlite plant. pic.twitter.com/tzOJDyrquW
— Henri Tiphagne (@Tiphagne) May 22, 2018
Tuticorin: Police baton-charged on protesters who were demanding ban on Sterlite Industries, in wake of the pollution created by them #TamilNadu pic.twitter.com/ES0T0YNW4k
— ANI (@ANI) May 22, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.