/indian-express-tamil/media/media_files/2025/04/25/bgQEb2oDbY7VdNXJrhl3.jpg)
தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஆழியார் மிகவும் பிரபலமானதாகும். இங்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் ஆழியார் பூங்கா மற்றும் வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆழியார் ஆற்றுப் படுக்கையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் குளிக்கும் பொழுது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளன தகவல் அறிந்து வந்த ஆழியார் காவல் நிலைய போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது . போலீசார் விசாரணையில் ஆழியார் பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்த சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய மூன்று மாணவர்கள் ஆழியார் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு என தெரிவித்தனர்.
ஆழியார் ஆற்றுபடுகையில் குளிக்க சென்ற சென்னை மாணவர்கள்; நீரில் மூழ்கி மூவர் பலி#pollachi#studentspic.twitter.com/23Ne1Q7NDO
— Indian Express Tamil (@IeTamil) April 25, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.