பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் இயற்கை எழில் சார்ந்த மனதை கொள்ளை கொள்ளும் ரம்யமாக காட்சியளிக்கும் பகுதியாகும். இங்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதும் வழக்கம்.
இந்நிலையில், பள்ளிகள் விடுமுறை தினம் என்பதால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியார் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/6bc44a1f-ff0.jpg)
இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வனதுறையினர் கவியருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
/indian-express-tamil/media/post_attachments/b4caeef1-bb8.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“