பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கோவில் நிர்வாகம் பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக கவியருவி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த பாலாற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் வழியாக பாலாறு, உப்பாறு உள்ளிட்ட மற்றும் சிற்றாறுகள் ஓடைகளில் இருந்து வரும் தண்ணீர் கடந்து செல்கிறது.
மேலும் நேற்று பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனை அடுத்து, கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“