பொள்ளாச்சியில் தாக்குதல்: பா.ஜ.க நிர்வாகிகள் கார்- ஆட்டோ உடைப்பு
BJP workers car-auto vandalized near Pollachi, Coimbatore Tamil News: கோவை பொள்ளாச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடிகள் கோடரியால் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore - Pollachi - BJP party admins car-auto vandalized Tamil News
Pollachi news in tamil: பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த பொன்ராஜ் (அமைப்புசார மாவட்ட செயலளர்), சிவா (முன்னாள் நகர பா.ஜ.க பொறுப்பாளர்), சரவணக்குமார் ஆகியோர் இந்துமுண்னனி வார்டு பெறுப்பாளர்களாக உள்ளனர்.
Advertisment
இன்று அதிகாலை மர்ம நபர்கள் பொன்ராஜ் கார், சிவாவின் கார், சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் இவரது இரண்டு ஆட்டோக்கள் மற்றும் கார் மீது கோடாரியால் கண்ணாடியை உடைத்தும் டீசல் ஊற்றியும் மர்ம நபர்கள் எரிக்க முயற்ச்சி செய்து உள்ளனர்.
தகவல் அறித்து வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்தும் CCTV கண்காணிப்பு கேமரா மூலம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.