சட்டப் பேரவையில் நேற்று (ஜன.10) பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
பொள்ளாச்சி விவகாரத்தில் யார் சொல்வது உண்மை; எப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவாதம் நடைபெற்று இருந்தது. இந்நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் அதிமுக சார்பில் ஆவணங்கள் சபாநாயகரிம் சமர்பிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் பொள்ளாச்சி விவகாரத்தில் அப்போதைய அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன. தொடர்ந்து இதுகுறித்து இன்று பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் கூறியதுதான் உண்மை. 24ம் தேதி புகார் அளித்த அன்றே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் 12ம் தேதி நடந்தது, 13ம் தேதி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்த அன்றே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, 24ம் தேதிதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இரண்டு தரப்பு ஆதாரங்களையும் நான் பார்த்துவிட்டேன், நான் கூறும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பு என்று கூறினார். சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். இதன் பின்இருவரும் இவ்விவகாரத்தை இதோடு முடித்துக் கொள்வதாக கூறியதையடுதது அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.