Advertisment

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு; 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

பொள்ளாச்சி அடுத்த கோட்டூரில் பசு மாடு கிணற்றில் தவறி விழுந்த நிலையில் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்க்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi: Cow falls into well, Rescued alive Tamil News

Cow falls into well in Pollachi: Rescued alive After a struggle of 3 hours Tamil News

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவரது தனியார் தோட்டத்தில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குட்டி ஈனும் நிலையில் உள்ள ஒரு பசு மாடு தவறுதலாக தோட்டத்து உரிமையாளரின் கிணற்றில் விழுந்துள்ளது. இதுகுறித்து அறிந்த அங்கு உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பசுமாடு குட்டி ஈனும் நிலையில் நிறைமாதமாக இருந்ததால் மாட்டை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்பு ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர் தரைமட்டமாக உள்ள கிணற்றை சுற்றி வேலி அமைத்து கால்நடைகள் செல்லாதவாறு பாதுகாத்திட வேண்டும் என தோட்டத்து உரிமையாளரிடம் வலியுறுத்தியுள்ளனர். கர்ப்பமாக உள்ள பசு மாட்டை லாபகமாக உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டு வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore Pollachi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment