/tamil-ie/media/media_files/uploads/2019/03/Pollachi-Case-1.jpg)
Pollachi Sexual Assault Case
Pollachi Issue : பொள்ளாச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கிய சம்பவமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு நிலவி வருகிறது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கைது செய்து நான்கு நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி காவலர்கள். முக்கிய குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் பண்ணை வீடுகள் என அனைத்தையும் ஏற்கனவே சோதனையிட்டு சில முக்கிய ஆவணங்களாக செல்போன்கள் மற்றும் பென்ட்ரைவ்களை சி.பி.சி.ஐ.டியினர் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிசிஐடி
திருநாவுக்கரசை நேரடியாக அழைத்து வந்து, வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளில் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது காவல்த்துறை. ஆனால் அப்பகுதி மக்கள், திருநாவுக்கரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதால், தற்போது அந்த முடிவினை சி.பி.சி.ஐ.டியினர் கைவிட்டுள்ளனர்.
முதன்முதலாக நான்கு நபர்களையும் கைது செய்த போது, அரசியல் அழுத்தம் காரணமாக அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த நான்கு நபர்களுக்கும் உதவி செய்த அரசியல்வாதி யார் என்ற ரீதியில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் சி.பி.சி.ஐ.டியினர்.
மேலும் படிக்க : Pollachi Case : அச்சம் தந்த பொள்ளாச்சி சம்பவம்… துப்பாக்கி அனுமதி கோரும் இளம்பெண்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.